by Shajitha K.S
பரிபூரண பெண்
March 8, 2021
அன்னையாய் , மனைவியாய் , தோழியாய் ,
காதலியாய் ,சகோதிரியாய் , மகளாய் …….
எத்தனை எத்தனை அழகு உனக்கு……..
எத்தனை எத்தனை பரிமாணம் உனக்கு……
உன்னை மேலும் மெறுகேற்றவா?….
உடலினை உறுதி செய்து ….உன் உடலினை ஒப்புக்கொண்டு….
உணர்வினை நிலைப்படுத்தி….. உன் உணர்ச்சியை வெளிப்படுத்தி…
எண்ணங்களை சீர்படுத்தி….. உன் அறிவினை மேம்படுத்தி….
செய்கையை பதப்படுத்தி…. உன் பழக்கத்தை முறைப்படுத்தி….
சுற்றத்தை சீராக்கி…… உன் சூழலை அரவணைத்து……
சக்தியுடன்……. உயிர் சக்தியுடன் ……
எல்லா நிலையிலும் சமன்படுத்தி
உயர்ந்து வா……
பெண்ணே !…….என் பரிபூரண பெண்ணெ!……